Skip to main content

Posts

Showing posts with the label மருத்துவ குறிப்பு

தினமும் காலை எழுந்தவுடன் வெந்நீர் பருகுவதால் உண்டாகும் பயன்கள்...!!

காலையில் தண்ணீர் அருந்தும் பலர் பொதுவாக வெந்நீர் அருந்துவது கிடையாது. ஆனால் வெறும்வயிற்றில் வெந்நீர் அருந்துவதால் பசி நன்கு எடுக்கும் என்று  கூறப்படுகிறது. குளிர் காலமானாலும் சரி, கோடை காலமானாலும் சரி, தினமும் காலை எழுந்து ஒரு டம்ளர் வெந்நீரைக் குடித்து வருவதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.  வெந்நீர் குடித்தவுடன், நம் உடல் வெப்பநிலை உயர்கிறது. அது உடனடியாக வியர்வையாக உடம்பை விட்டு வெளியேறுகிறது. இதனால் உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகிறது. அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடி நன்றாக வளர்வதுடன், முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி, மேலும் முடிகள் வளர வழி வகுக்கும். அடிக்கடி காபி, டீ  குடிப்பவர்கள் அதற்கு மாற்றாக சுடு தண்ணீரில் சுக்கு கலந்து குடிப்பது சிறந்தது. இதன் மூலம் வாயு தொல்லையில் இருந்து விடுபட முடியும். அளவுக்கு அதிகமாக உணவு, எண்ணெய் பலகாரம், இனிப்பு, போன்றவை சாப்பிட்டால் சில நேரங்களில் நெஞ்சு கரிக்க தொடங்கும். அப்போது ஒரு டம்ளர் வெந்நீரை எடுத்து பருகினால் கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போய்விடும், உணவும் செரித்து விடும். தினமும் க...

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் உணவுகள் என்ன...?

அருகம் புல்லை எடுத்து நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு அரைத்து அதன் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும். வாரம் ஒரு முறை எடுத்து வந்தால் இரத்தம் சுத்தமாகும். உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால், ஹீமோகுளோபின் பிரச்சனைகள் தீரும். அத்துடன், ஒரு நாளைக்கு மூன்று உலர் திராட்சை வீதம் 9 நாள் பாலில் ஊற வைத்து சாப்பிட்டு ஹீமோகுளோபின் அளவு கூடும். அதே போல் ஒவ்வொரு நாளும்  நீரில் ஊற வைத்த உலர் திராட்சை சாப்பிட்டு வருவதன் மூலம் மாதவிடாய்க் கோளாறுகள், மற்றும் இதய நோய் தீரும். புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். தொடர் இருமல் தொண்டை வலி போன்றவையும்  குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். கீரைகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். முருங்கைக் கீரை வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை முருங்கை இலையை உணவில் சேர்த்துக்  கொள்ளுங்கள். பொன்னாங்கன்னிக் கீரை, புதினாக் கீரை, அரைக் கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைத்து பகல் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் பதிய இரத்தம்  உற்பத்தியாகும். ஹீமோகு...

ஆரஞ்சு பழத்தில் என்ன வைட்டமின்கள் உள்ளது தெரியுமா...?

ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், நார்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்களின் காரணமாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நம்மை மிகவும் சுறுசுறுப்புடன் வைத்திருக்கும். அல்சர் பிரச்சனை உள்ளவர்களுக்கு, அல்சரை குணப்படுத்தும். அனைத்து பழங்களுமே ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. அதிலும் ஆரஞ்சு பழத்தில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிகமாக உள்ளது. மேலும் ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். மேலும் இது உங்களுக்கு நோய் வராமல் பாதுகாக்க  உதவும். ஆரஞ்சு பழச்சாறில் இருக்கும் வைட்டமின் பி, வைட்டமின் சி, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் இருப்பதன் காரணமாக உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறும். நரம்பு மண்டலம் அமைதியாகி, சீராக செயல்பட நல்ல வழிவகை செய்யும். எலும்பு தொடர்பான பிரச்சனை இருக்கும் நபர்கள் மற்றும் அல்சர் நோயாளிகள், 40 வயது கடந்தவர்கள், உடலில் வெப்பம் அதிகமாக இருக்கும் நபர்கள், நரம்பு  தொடர்பான பிரச்சனை உள்ளவர்களுக்...

பேரிச்சம் பழத்தில் உள்ள ஏராளமான ஆரோக்கிய நன்மைகள்...

பேரிச்சம் பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் மேம்படுவதோடு மட்டுமில்லாமல் உங்களுக்கு நோய் வராமலும் காக்கும். பேரிச்சம் பழத்தில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, நார்ச்சத்து, ப்ரோடீன், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி-6 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. மலசிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் 2 முதல் 3 பேரிச்சம் பழத்தினை உட்கொண்டு வந்தால் உங்களுக்கு மலசிக்கல் பிரச்சினையை தடுத்து ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும். தினமும் 2 முதல் 3 பேரிச்சம் பழத்தினை உட்கொண்டு வந்தால் உங்களுக்கு இரத்த சோகை நோய் வராமல் தடுக்கும். மேலும் உங்கள் உடலில் இரத்த உற்பத்தியினை அதிகரிக்க செய்யும். பேரிச்சம் பழத்தில் மிகவும் குறைந்த அளவு கொழுப்பு உள்ளது. இதனை நீங்கள் உண்டு வரும்பொழுது உங்கள் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் காக்க  உதவுகின்றது. பேரிச்சம் பழத்தில் உங்கள் முடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான ப்ரோடீன் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இவற்றை நீங்கள் தினமும் உட்கொண்டு வந்தால் உங்களுக்கு முடி கொட்டுதல் பிரச்சினை முற்றிலுமாக ஏற்படாமல் தடுக்கும...

தினமும் பிஸ்தா பருப்பை சாப்பிட்டால் கொழுப்பை அதிகபடுத்துமா...?

நீரிழிவு நோயாளிகளுக்கு பிஸ்தா ஒரு நல்ல பயனுள்ள உணவாகும். பிஸ்தா பருப்பில் வைட்டமின் பி6 ஊட்டச்சத்து அதிகளவு உள்ளது. மேலும் வைட்டமின் ஈ அதிகம் இருப்பதால் அது ஹார்மோன்கள் செயல்பாட்டை சீர் செய்யும். சரும அழகை அதிகரிக்கச் செய்யும். பிஸ்தாவில் கொழுப்பு அதிகம் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. அதில் புரதமும் நார்ச் சத்தும் தான் மிகுந்துள்ளது. உடலினை உறுதி செய்யும் ஆன்டி ஆக்சிடென்டுகள் பிஸ்தா பருப்பில் நிறைந்துள்ளது. குழந்தை பெற்ற பெண்கள் பிஸ்தா பருப்பை பாலுடன் வேக வைத்தோ அல்லது நெய்யில் பொரித்தோ சாப்பிட தாய்ப்பால் நன்கு சுரக்கும். ஆண், பெண்  இருபாலரும் பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து தினமும் மாலையில் சாப்பிட்டால் ஞாபகச் சக்தி அதிகரிக்கும். பிஸ்தாவில்  உள்ள வைட்டமின் பி6, காப்பர், மங்கனீஸ், பாஸ்பரஸ், தையாமின் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. பிஸ்தா பருப்பை நெய்விட்டு வறுத்து, ஒன்று  அல்லது இரண்டு தினமும் சாப்பிட செரிமான சக்தி அதிகப்படுவதுடன் சுறுசுறுப்பும் உண்டாகும். பிஸ்தாவை தினமும் சாப்பிட்டு வர, அது உடலை எப்போதும் துடிப்பாகவும் சுறு சுறுப்பாகவும் வைக்க உதவும்....

கொய்யா இலையில் டீ போட்டு குடித்து வருவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்...!!

கொய்யா இலையை டீ போல் செய்து குடித்து வர வந்தால், அது வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுத்து, மூக்கு  அழற்சிகளை குணமாக்குகிறது. கொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மென்று அல்லது கொய்யா இலையில் டீ செய்து சாப்பிட்டு வந்தால், அது பல்வலி, ஈறு பிரச்சனைகள். வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் ஆகியவற்றை குணப்படுத்துகிறது. கொய்யா இலையில் போடும் டீயானது உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளை பராமரித்து கல்லீரலுக்கு சிறந்த டானிக்காக  பயன்படுகிறது. மேலும் இதில் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல் மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு நல்ல தீர்வினைத் தருகிறது. கொய்யா இலையின் கஷாயம் செய்து தொடர்ந்து குடித்து வந்தால், பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உதிரப்போக்கு தடைபட்டு, தைராய்டு சுரப்பை  சமநிலைப்படுத்துகிறது. 30 கிராம் கொய்யா இலையை, ஒரு கையளவு அரிசி மாவுடன் சேர்த்து, 2 டம்ளர் நீரில் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு  பிரச்சனைக்கு உடனடி தீர்வைக் காணலாம். கொய்யா இலையை வெயிலில் காயவைத்தோ அல்லது பச்சையா...

மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் முருங்கைக்கீரை...!!

முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம். முருங்கைக்கீரை ஒரு மருத்துவ குணம்மிக்க மூலிகை. மற்ற கீரை வகைகளை விட அதிக அளவு புரதச்சத்தும், மற்ற சத்துகளும் முருங்கை கீரையில் நிறைந்துள்ளன. முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’  கிடைக்கிறது. முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் நல்ல ரத்தம் ஊறும். பற்கள் பலப்படும், முடி நீண்டு  வளரும், நரை முடி ஏற்படுவது குறையும் மற்றும் தோல் வியாதிகள் நீங்கும். ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து வேறில்லை. முருங்கைக்கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் சமைத்து சாப்பிட்ட...
முக்கியமாக, பூச்சிக்கொல்லி அடிக்கப்படும் உணவுப் பொருள்களில் ஊட்டச்சத்துகள் மிகவும் குறைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு சிறு சிறு குறைபாடுகள் நிறைய ஏற்படுகிறது.   முன்பெல்லாம், அறுவது, எழுவது வயதை தாண்டினால் தான் கண் பார்வை குறைபாடு ஏற்படும். ஆனால், இன்றோ ஐந்து வயது, பத்து வயது குழந்தைகளே போதிய  ஊட்டச்சத்து இன்றி பார்வைக் குறைபாடினால் பாதிக்கப்படுகின்றனர்.   பூச்சிக்கொல்லி அடிக்கப்பட்டு தயாரிக்கப்படும், பாதுகாக்கப்படும் உணவுகளை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வந்தால், அது கருவை பாதிக்கும் என்றும். இதனால்,  கருவில் வளரும் குழந்தைக்கு குறைபாடுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.   தொடர்ந்து நெடுங்காலமாக பூச்சிக்கொல்லி அடிக்கப்பட்ட உணவுப் பொருள்களை உட்கொண்டு வந்தால், நினைவாற்றல் குறைபாடு, மூளையின் செயல்திறன் குறைபாடு, மூளையில் சேதம் ஏற்படுதல் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.   கீரை வகைகள், உருளைக்கிழங்கு, கேரட், வெள்ளரிகள், பச்சை பீன்ஸ், காலிபிளவர், தக்காளி, சர்க்கரைவள்ளி, கத்திரிக்காய், ப்ராக்கோலி, காளான் மற்றும் கு...

மாதவிடாய் பிரச்சனைகளை போக்கும் வல்லாரை கீரை

நியாபக சக்தியை அதிகரிக்கும் என கூறப்படும் வல்லாரை கீரையில் மற்ற குணநலன்களையும் தெரிந்துக்கொள்ளுங்கள்.    வல்லாரைக் கீரையில் நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து மற்றும் வைட்டமின்கள் மிகுதியாக உள்ளன.    வல்லாரையை உணவாகக் கொண்டால், வாயு சம்பந்தமான நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.    வல்லாரை இலையில் இருந்து பால் எடுத்து தினமும் அதிகாலையில் 30 மி.லி அளவில் சாப்பிட்டால் குஷ்ட நோய்கள், தோல் நோய்கள், ரத்தத்தில் ஏற்படும் பாதிப்புகள் குணமாகும்.    வல்லாரை சாறு, கீழாநெல்லி இலைச்சாறு சம் அலவு எடுத்து கொள்ளவேண்டும். பசும்பால் 100 மி.லி. எடுத்து ஒன்றாகக் கலந்து, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், முற்றிய மஞ்சள் காமாலைகூட குணமாகும்.    வல்லாரைச் சாறில் பெருஞ்சீரகத்தை ஊறவைத்து எடுத்து பொடியாக்கி, தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மாதவிலக்குக்  கோளாறுகள் சரியாகும். 

சைஸ் ஜீரோவாக சீரகம் + வாழைப் பழம்: ட்ரை பண்ணுங்க...!

உடலுக்கு குளிர்ச்சியும் தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.  தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் அஜீரணக் கோளாறுகள் வராது. சீரகத்தை லேசாக வறுத்து அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புகள் வலுப்பெறும், நரம்புத் தளர்ச்சி குணமாகும்.  சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால்  வயிற்றுப் பொருமல் வற்றி நலம் பயக்கும்.  சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய அரைத்து எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால் குடல் கோளாறுகள் குணமாகும். மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். குளிர்காலத்தில் சுவாசப்பாதையில் மற்றும் நுரையீரலில் உண்டாகும் தொற்றை எதிர்த்து போராடும். சுவாசத்தை சீராக்கும். கல்லீரலில் படியும் அதிகபடியான நச்சை வெளியேற்றும். இதனால் கல்லீரலின் வேலை குறைவதோடு அதன் ஆரோக்கியமும் அதிகமாகும்.

Ad by Adsterra