Skip to main content

Posts

Showing posts with the label NEWS

இந்தியாவால் உலகிற்கே மருந்துகள் வழங்க முடியும் – பில்கேஸ்ட் நம்பிக்கை

உலக அளவில் என்றுமே இந்தியர்களின் அறிவுக்கும், திறமைக்கும் மதிப்புண்டு என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபனமாகியுள்ளது. உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் ஒட்டுமொத்த உலகிற்கே இந்தியாவால் மருந்துகள் வழங்க முடியும் என புகழாரம் சூட்டியுள்ளார். இஒதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது : இந்தக் கொரோனா காலத்தில் தான் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் இந்திய அரசுடன் இணைந்து உத்தரபிரதேசம்,பீகார் ஆகிய மாநிலங்களில் கொரொனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிப்பதாகவும் கூறியுள்ளானர். இந்தியர்களில் புகழை உயர்த்தியுள்ள பில்கேட்ஸிற்கு அனைவரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனாவிற்கு சித்த மருத்துவ சிகிச்சை! – 45 பேர் குணமடைந்து திரும்பினர்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு சித்த மருத்துவமும் சோதனை முறையாக பரிசோதிக்கப்பட்டு வரும் நிலையில் பலர் குணமடைந்து வீடு திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் அதிக பாதிப்புகளை சந்தித்து வந்த சென்னையில் தற்போது பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ள நிலையில் மதுரை உள்ளிட்ட வேறு சில பகுதிகளில் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் அலோபதி சிகிச்சை முறைகள் மேற்பட்டு வரும் நிலையில், சித்த மருத்துவமனைகளிலும் சோதனையாக சிலர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக வியாசர்பாடியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சித்த மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் 45 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். முன்னதாக ஏற்கனவே 24 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்க ரயில் எந்திரமும் வேணாம்! – இந்தியாவின் தடையால் அதிர்ச்சியில் சீன நிறுவனம்!

இந்தியாவில் சீன செயலிகள் தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரயில் எஞ்சின் ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டிருப்பது சீனாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலை தொடர்ந்து சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து நெடுஞ்சாலை துறையிலும் சீனாவின் பங்களிப்பு தடை செய்யப்படுவதாய் அறிவிக்கப்பட்டது. இப்படியாக பல துறைகளில் சீனாவிற்கு முட்டுக்கட்டை போட்டு வரும் இந்தியா தற்போது ரயில்வேயிலும் சீனாவை புறக்கணிக்க தொடங்கியுள்ளது. சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்களுக்கான 18 வகையான எஞ்சின் உதிரி பாகங்களுக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டன. பல இந்திய நிறுவனங்களும் கலந்து கொண்ட ஒப்பந்த கோரலில் யாங்ஜி என்ற சீன நிறுவனமும் கலந்து கொண்டு குறைவான ஒப்பந்த புள்ளிகள் அளித்து டெண்டரை எடுத்திருந்தது, இந்நிலையில் தற்போது சீன நிறுவனங்களுக்கு தொடரும் தடையால் சீன நிறுவனத்துடனான உதிரி பாக ஒப்பந்தத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடரும் தடைகளால் சீன நிறுவனங்கள் பல அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளன.

Ad by Adsterra