Skip to main content

ஆண்கள் டாய்லெட்டை பயன்படுத்தினேன்: யாஷிகா ஆனந்த் அதிர்ச்சி தகவல்

yashika

இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான யாஷிகா ஆனந்த், அதன் பின் ஒரு சில திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார்இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் சரமாரியாக பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வீடியோவில் ஆண்கள் டாய்லெட்டை பயன்படுத்தினீர்களா? என்ற கேள்விக்கு ’ஆம்’ என்று யாஷிகா ஆனந்த் பதிலளித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் ரசிகர்கள் சரமாரியாக விமர்சனம் செய்த நிலையில் அவர் விளக்கம் அளித்தபோது ’தான் பத்து வயதாக இருந்தபோது அமெரிக்கா சென்றதாகவும், அப்போது ஒரு முறை டாய்லட் செல்ல வேண்டியிருந்த நேரத்தில் பெண்கள் டாய்லெட் நிரம்பி இருந்ததால் ஆண்கள் டாய்லெட்டை பயன்படுத்தியதாகவும் அவர் விளக்கமளித்தார். மேலும் அது அறியாத வயதில் செய்த செயல் என்றும், அதன்பின்னர் தான் ஆண்கள் டாய்லெட்டை பயன்படுத்திய்து இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். இந்த விளக்கத்தை அடுத்து நெட்டிசன்கள் அமைதி ஆகினர்.

மேலும் தனக்கு பாய் பிரண்ட் இருப்பது உண்மை என்றும், சமூக வலைதளங்களில் போலி அக்கவுண்ட்களை பயன்படுத்திய அனுபவம் உண்டு என்றும், 24 மணி நேரம் குளிக்காமல் இருந்த அனுபவமும் உண்டு என்றும் அவர் ஒருசில கேள்விகளுக்கு அந்த வீடியோவில் பதிலளித்துள்ளார்.

Ad by Adsterra